
posted 1st January 2022

அங்கஜன் இராமநாதன் பா. உ.
மலரும் புத்தாண்டு நாட்டு மக்களுக்கு சுபீட்சம் நிறைந்த ஆண்டாக அமையட்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்;
கடந்த வருடம் பல சவால்களைத் தாண்டி அவற்றை எல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு இன்று புதியதொரு ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறோம்.
கடந்த வருடம் பல படிப்பினைகளை எமக்குத் தந்திருந்தது. அந்தப் படிப்பினைகள் எல்லாவற்றையும் படிக்கற்களாக மாற்றி இவ்வருடத்தை வளமான ஆண்டாக மாற்ற வேண்டும்.
புதிய ஆண்டில் அனைவரும் ஒன்றுபட்டு வளமான ஆரோக்கியமான நாட்டினைக் கட்டியெழுப்ப திடசங்கற்பம் கொள்வோம்.
2022ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு வளமான வாழ்வையும்-நிலையான வளர்ச்சியையும் கொடுக்கும் அபிவிருத்திக்கான ஆண்டாக அமையும் என நம்புகிறேன். இவ் ஆண்டில் பொருளாதார புரட்சி ஒன்றினை நாட்டில் ஏற்படுத்த அனைவரும் இத் தருணத்தில் உறுதிகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் பொருளாதார ரீதியாக தம்மை வளப்படுத்த வேண்டும். நாட்டு மக்களின் மனச்சுமை, பொருளாதாரத் சுமைகள் அனைத்தும் குறைந்து மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் இவ்வாண்டில் ஈடேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மனமகிழ்வடைகிறேன். செழிப்பான, மகிழ்ச்சிகரமான ஆண்டாக இவ்வாண்டு அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று அவர் தனது வாழ்த்துச் செய்தி கூறுகின்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House