48 மணியினுள் ஒரு மில்லியன் வியூவைத் தாண்டிய பாடல்

இளையராஜா எழுதி, இசையமைத்த 'மாயோன்' படப் பாடல் இணையத்தில் வெளியான 48 மணி நேரத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

கர்னாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களாக வலம்வரும் ரஞ்சனி - காயத்ரி ஆகிய இருவரும் இணைந்து, முதன்முதலாக இளையராஜாவின் இசையில் 'மாயோனே மணிவண்ணா...' எனத்தொடங்கும் 'மாயோன்' படப் பாடலுக்கு பின்னணி பாடியிருக்கிறார்கள்.

அண்மையில் வெளியான இந்தப் பாடலை கேட்ட ரசிகர்கள் பலரும், இளையராஜாவின் குரலில் இதற்கு முன்னர் வெளியான 'ஜனனி ஜனனி...' எனத் தொடங்கும் பாடலுக்குப் பிறகு, இளையராஜா எழுதி இசையமைத்த 'மாயோனே மணிவண்ணா...' என்ற பாடல் அனைவரது கவனத்தையும் கவர்ந்து இருக்கிறது என பின்னூட்டமிட்டு வருகிறார்கள்.

'மாயோனே மணிவண்ணா...' எனத் தொடங்கும் பாடலில் இளையராஜாவின் இனிய மெட்டும், பக்தி உணர்வு ததும்பும் சொற்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து செவிக்கு இனிய அமுது படைத்திருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இசை ரசிகர்கள், இசை ஆர்வலர்கள், இசை விமர்சகர்கள், பாமரர்கள், இணைய தலைமுறையினர், இளைய தலைமுறையினர் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்று 'மாயோனே மணிவண்ணா...' என்ற பாடல் இணையத்தில் புதிய சாதனையை படைத்து வருகிறது.

டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் 'மாயோன்' படத்தை அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கியிருக்கிறார். இதில் சிபிராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

சிம்பொனி இசைத்த இசை மேதை இளையராஜாவின் மயக்கும் மெட்டில் உருவாகி, காலை நேர பூபாளத் தென்றலாக 'மாயோனே மணிவண்ணா...' என்ற பாடல், இனி தமிழகத்தின் அனைத்து இல்லங்களிலும் ஒலிக்கும். வரவிருக்கும் மார்கழி மாதங்களில் அதிகாலையில் ஒவ்வொரு இல்லங்களிலும் ஒலிக்கும் பக்தி பாடலின் பட்டியலில் ரஞ்சனி, காயத்ரியின் இனிய குரலில் ஒலிக்கும் 'மாயோன்' பட பாடலும் இணையும் என்பது உறுதி.

இதனிடையே ரசிகர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மற்றும் கீதா ஜெயந்தி தின வாழ்த்துகளையும் தெரிவிக்கும், ‘மாயோன்’ படக்குழுவினர், இசை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கும் இளையராஜாவின் இந்தப் பாடலை தெலுங்கிலும் வெளியிட்டிருக்கிறார்கள் . தெலுங்கில் இந்தப் பாடலை பாடலாசிரியர் பாஸ்கரபாட்லா எழுத, பின்னணி பாடகிகளான சைந்தவி மற்றும் வினயா கார்த்திக் ராஜன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். அங்கும் இந்தப் பாடலுக்கு பெரிய வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

48 மணியினுள் ஒரு மில்லியன் வியூவைத் தாண்டிய பாடல்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House