
posted 31st December 2021

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் வியாழக்கிழமை (30.12.2021) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது .
கோவிட் - 19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று 1757 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்;
எங்கே எங்கே உறவுகள் எங்கே
குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து
வேண்டும், வேண்டும் நீதி வேண்டும்
சர்வதேசமே பதில் சொல்
மரண சான்றிதழும் வேண்டாம்; நட்டஈடும் வேண்டாம்
என்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House