
posted 12th December 2021

‘மாவீரன் கர்ணன்' என்று ஓட்டோவின் பின்புறத்தில் எழுதி வைத்திருந்தமைக்காக இரு இளைஞர்களை முல்லைத்தீவு பொலிஸார் விசாணைக்கு உட்படுத்தியுள்ளனர். அத்துடன், ஒருவரை கைது செய்து பின்னர் விடுவித்துமுள்ளனர்.
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தை சேர்ந்த சேர்ந்த சகோதரர்களான தர்மராசா பிந்துசன் (வயது 21), தர்மராசா கனிஸ்ரன் (வயது 19) ஆகியோரே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத்தை இந்த சொல் தூண்டுவதாகத் தெரிவித்தே பொலிஸாரால் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன், 3 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அத்துடன், அந்த ஸ்ரிக்கரை ஓட்டோவிலிருந்து அகற்றுமாறும் மிரட்டல் விடுக்கின்றனர். இதனால், தாம் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி மூலம் முறையிட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
முன்னதாக, 19 வயதான இளைஞரை விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கோரி பொலிஸார் கடந்த 9ஆம் திகதி கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்தினர். பின்னர் மறுநாள் விடுவிக்கப்பட்டனர் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, மகாபாத கதையில் வரும் கர்ணன் பாத்திரம் மீதான ஈர்ப்பினாலேயே தாம் மாவீரன் கர்ணன் என எழுதப்பட்ட ஸ்ரிக்கரை ஓட்டோவில் ஒட்டினார் என்றும் ஓட்டோவின் சாரதி தெரிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House