வெற்றிகர சத்திர சிகிச்சை
வெற்றிகர சத்திர சிகிச்சை

வைத்திய நிபுனர் டாக்டர். ராஜகருணா

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள பழம் பெரும் அரச வைத்தியசாலையான நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் முதல் தடவையாக இடம்பெற்ற கர்ப்பிணித்தாய் ஒருவருக்கான மகப்பேற்று பிரசவ சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.

டாக்டர். சஹீலா ராணி இஸடீனை வைத்திய அத்தியட்சகராகக் கொண்டு அவரது சிறந்த நிருவாகத்தில் மக்கள் சேவையாற்றிவரும் இந்த ஆதார வைத்திசாலையில்,
மகப்பேற்று வைத்திய நிபுணராகக் கடந்த இரு வாரங்களுக்கு முன்னரே நியமனம் பெற்ற டாக்டர். ஆர்.எம்.யூ.ராஜகருணா, முதல் தடவையாக இந்த மகப்பேற்று சத்திர சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து, பெரும் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக இடம் பெற்றுள்ள இந்த மகப்பேற்று சத்திர சிகிச்சைக்குட்பட்ட தாயும், பெண் குழந்தையும் தற்சமயம் நலமுடனிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை குறித்த முதலாவது பெருமையைப் பெற்றுக் கொண்ட பிரசவத்தாயைப் பாராட்டி சமூக சேவையாளரும், நிந்தவூர் “ஹயா பூட் நியூ சிட்டி” உரிமையாளருமான எஸ்.எல்.ஜெசூலி நேரில் சென்று குழந்தைக்கான பரிசுப் பொருட்களை இன்ற (புதன்) வழங்கி வைத்தார்.

இதன் போது, வைத்திய நிபுனர் டாக்டர். ராஜகருணா, வைத்திய அத்தியட்சகர் டாக்டர். சஹீலா ராணி இஸடீன், டாக்டர். மாஹீர், திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எம்.றபீக், தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் எஸ்.எம்.உபைதுல்லா, தொற்று நோய் பொறுப்பு சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் எம்.ஐ.உமரலி, மேற்பார்வை உத்தியோகத்தர் எஸ்.ஐ.இல்யாஸ் உட்பட வைத்தியசாலை தாதியார்கள் பலரும் பிரசன்னமாக விருந்தனர்.

மேலும், இந்த வெற்றிகரசெயற்பாட்டுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் பெரும் கரிசனை கொண்டு செயற்பட்ட வைத்திய அத்தியட்சகர் டாக்டர். சஹீலா ராணி இஸடீன், சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர். ராஜகருணா மற்றும் சம்பந்தப்பட்ட வைத்தியசாலை தாதியர்கள், ஊழியர்களை நிந்தவூர் பொது மக்கள் விதந்து பாராட்டியுள்ளனர்.

வெற்றிகர சத்திர சிகிச்சை

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House