வரலாற்றை இயம்பும் ஆரியகுளம் “தூய நகரம்”

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடையின் நிறுவுநர் வாமதேவா தியாகேந்திரனின் நிதியுதவியுடன் சீரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது .

இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவும், சிறப்பு விருந்தினர்களாக தியாகேந்திரன் அர்ச்சுனா மற்றும் நிலாஜினி தியாகேந்திரனும் கலந்து கொண்டனர்.

ஆரியகுளத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் நினைவுக்கல் மூன்று மொழிகளிலும் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன், ஆரியகுளம் பெயர் பொறிக்கப்பட்ட எழுத்துரு திரைநீக்கம் செய்யப்பட்டு, ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது.

ஆரியகுளத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை தன் செலவில் முன்னெடுத்த தியாகி அறக்கொடையின் நம்பிக்கை பொறுப்பாளர் வாமதேவா தியாகேந்திரனுக்கு 'அறக்கொடை அரசன்' எனும் நாமம் சூட்டி மாநகர சபையால் மதிப்பளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வாண வேடிக்கைகள், தண்ணீர் விசிறல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.

மேலும், மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த மாநகர சபை உறுப்பினர்கள் எவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றை இயம்பும் ஆரியகுளம் “தூய நகரம்”

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House