
posted 30th December 2021
யுத்தத்தால் சிதைந்து போன எம் தேசத்தை மீளக் கட்டியெழுப்ப தென்னைப் பயிர்ச்செய்கை கைகொடுக்கும் எனப் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் தென்னை அபிவிருத்தி அதிகாரசபை அமைப்பது தொடர்பாக கொழும்பில் 28/12 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
ஜனவரி 10ம் தேதி தொடக்கம் 14ம் தேதி வரையான காலப்பகுதிக்குள் அமைச்சர் ரமேஸ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ, தென்னை அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவர், அமைச்சின் உத்தியோகத்தர்கள், வடமாகாணத்தில் வளங்களுக்கு பெறுமதி சேர்க்கவிருக்கும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் அனைவரும் வடமாகாணத்திற்கு வருகை தந்து வடமாகாணத்திற்கான தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கான அலுவலகத்தை பளையில் ஆரம்பிக்கவுள்ளனர்.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்திற்கு அமைவாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து கிராமிய பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் வடமாகாணத்தில் தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய அலுவலகம் அமையப்பெறவுள்ளது. அமைச்சர் ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்க ஆகியோருடன் பேசி வடமாகாணம் நாட்டின் மூன்றாவது தென்னை உற்பத்தி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கில் தென்னை வளம் உள்ள போதிலும், அதன் உற்பத்திப் பொருட்கள் முழுமையாக தென் பகுதிக்கு போய் சேர்ந்து விடுகின்றன.
வடக்கிலும் பெறுமதி சேர்க்கும் நிறுவனங்கள் வரும் போது வடக்கு மக்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும், புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாகும். வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி மூன்றாவது தென்னை முக்கோண வலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிந்து பத்து வருடமாகியும் இன்றும் எமது பல பிரதேசங்கள் வறுமை நிலையில் உள்ளன.எமது மக்களின் வருமானம் அதிகரிக்க வேண்டுமானால் பிரதேச வளங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.வடக்கில் பனை,தென்னை ஆகிய வளங்கள் உள்ளன.யாழ் மாவட்டத்தில் மாத்திரம் பத்து இலட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் உள்ளன.எனவே வடக்கிற்கு உரிய பெறுமதி சேர்க்கும் நிறுவனங்கள் வரும் போது தென்னை உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House