யுத்தக் குற்ற சந்தேகநபர் அமெரிக்கா நுளைய மறுப்பு
யுத்தக் குற்ற சந்தேகநபர் அமெரிக்கா நுளைய மறுப்பு

மேஜர் ஜெனரல் உதய பெரேரா

இலங்கையின் இன்னோர் இராணுவ அதிகாரிக்கும் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்கா புறப்பட்ட அவர் சிங்கப்பூரில் இருந்து பயணத்தை தொடர முடியாது கொழும்பு திரும்பினார்.

2009 முதல் 2011 வரை மலேசியாவிற்கான பிரதி உயர்ஸ்தானிகரான மேஜர் ஜெனரல் உதய பெரேரா குடும்பத்தினருடன் அமெரிக்கா செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவரை யுத்தக் குற்ற சந்தேகநபர் என அமெரிக்கா அடையாளப்படுத்தியுள்ளது எனவும் அதில் தெரிவித்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி உதயபெரேரா தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா செல்வதற்காக கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக குடிவரவு பகுதிக்கு சென்றவேளை அவருக்கு அமெரிக்காவின் தீர்மானம் குறித்து தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்ட ஊடகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் எயார்லைன்ஸ் பணியாளர்கள் அமெரிக்காவிலிருந்து தங்களுக்கு அது குறித்த செய்தி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உதய பெரேரா பயணத்தை இரத்துச்செய்துள்ளார். ஆனால் அவரின் குடும்பத்தவர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர்.

ஏற்கனவே, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, மிருசுவில் எண்மர் படுகொலையாளியான சுனில் ரத்நாயக்க, 11 பேர் கடத்தல் வழக்கில் சந்தேகநபரான கடற்படை சிப்பாய் சந்தன ஹெட்டியராச்சி ஆகியோருக்கும் அமெரிக்காவுக்குள் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யுத்தக் குற்ற சந்தேகநபர் அமெரிக்கா நுளைய மறுப்பு

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House