
posted 18th December 2021
மக்கள் ஆட்சியை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் பறிக்கப்படாதிருப்பதற்காவே பாதீட்டை வெற்றியடைய செய்திருந்தோம் – யாழ் மாநகரின் பாதிட்டுக்கான ஆதரவு குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவிப்பு
மக்கள் நலனை முன்னிறுத்தியதான எமது கட்சியின் கொள்கை நிலைப்பாட்டுக்கு அமைய மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி ஒன்று மக்கள் மத்தியில் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தியே இவ்வருடத்திற்கான யாழ் மாநகர சபையின் பாதீட்டுக்கு எமது கட்சி ஆதரவை வழங்கி வெற்றிபெறச் செய்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தோற்கடிக்கப்படும் என பலரது ஆரூடங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதல்வர் மணிவண்ணன் தரப்பினரது தலைமையிலான யாழ் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முழுமையான ஆதரவுடன் மேலதிக 3 வாக்குகளால் வெற்றிபெற்றிருந்தது.
இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் உறுப்பினர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள் மேலும் கூறுகையில்;
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் பெறுபெறுகளுக்கு அமைய யாழ் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குள் இருக்கும் ஊர்காவற்றுறை பிரதேச சபையை தவிர எந்தவொரு கட்சியும் சபைகளை ஆட்சி செய்வதற்கான பெரும்பான்மையை பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில் எமது கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எமது கட்சியின் நிலைப்பாட்டுக்கு அமைவாக மக்களின் நலன்சார் அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டு சபைகளின் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளால் தான் செயற்படுத்த வேண்டும் என்பதற்க இணங்க குறித்த சபைகளின் அட்சி அதிகாரங்களை பொறுப்பேற்க யார் முன்வருகின்றார்களோ அவர்களுக்கு பங்காளிகளாக அல்லாது ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை வழங்கு முன்வந்திருந்தது.
அதனடிப்படையில் கடந்தவருடம் நடைபெற்ற பாததீட்டின்போது மக்களது நலன்களை புறக்கணித்து தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பாதீட்டை தோற்கடித்து தற்போதைய முதல்வர் தலைமையிலான தரப்பினருக்கு ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பத்தை நாம் வழங்கியிருந்தோம்.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை முதல்வர் மணிவண்ணன் இன்றையதினம் சபையில் முன்வைத்திருந்த நிலையில் அதை தோற்கடிப்பதற்கான முயற்சிகள் பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் மக்கள் நலனையே முதன்மையாக கொண்டு சேவைகளை முன்னெடுத்துவரும் எமது கட்சி குறுகிய சுயநலன்களுக்கு இடங்கொடாது மக்கள் ஆட்சி தொடர்ந்தும் எமது யாழ் மாநகரசபையில் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் குறித்த பாதீட்டை ஆதரித்து மக்களின் சேவையை தொடர்ந்தும் மக்கள் பிரதிநிதிகள் முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை உறுதிப்படுத்தி இந்த பாதீட்டை வெற்றியடைய செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House