
posted 28th December 2021
யாழ். மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா செவ்வாய் (28.12.2021) மரியாதை நிமித்தம் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
நல்லை ஆதினத்துக்கு சென்ற யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியை நல்லை ஆதீன குருமுதல்வர் பொன்னாடை போர்த்தி வரவேற்றதோடு இராணுவத் தளபதியால் நல்லை ஆதீன குருமுதல்வருக்கு நினைவுப் பரிசும் கையளிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த நல்லை ஆதீன முதல்வர்,
புதிதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக பதவி ஏற்றுள்ள என்னை இன்று மரியாதை நிமித்தம் சந்தித்தார். அவர் புத்தாண்டுக்காக என்னை வந்து சந்திப்பதாக தெரிவித்திருந்தார்.
தற்போதைய யாழ். மாவட் நிலைமை தொடர்பில் விளக்கமாக கேட்டறிந்துகொண்டதோடு அண்மையில் யாழ். மாவட்டத்தில் இந்து விக்கிரகங்கள் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்படுவதை தடுத்து நிறுத்துமாறு நான் அவரிடம் கோரியுள்ளேன்.
அத்துடன் எதிர்வரும் தைப்பொங்கல் உற்சவத்தை இந்து மக்கள் அனைவரும் சுதந்திரமாக கொண்டாடுவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கமாறும், கிராமங்களில் ஆலய வழிபாட்டுக்கு இராணுவத்தினரால் இடையூறு ஏற்படாதவாறு செயற்படவேண்டும் என்றும், குறிப்பாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று பொதுமக்கள் தமது வழிபாடுகளையும் மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறும்,
எதிர்வரும் புத்தாண்டு நிகழ்வை பொதுமக்கள் சுதந்திரமாக கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் கோரினேன்.
தற்போதைய நிலையில் இனங்களுக்கிடையில் விரிசல் நிலை ஏற்படுகின்ற நிலை காணப்படுகின்றது. இது தொடர்ந்தால் பெரிய ஒரு பிரச்னையாக உருவெடுக்கும். அதனை நிறுத்துவதற்கு தங்களாலான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையையும் நான் முன்வைத்தேன்.
அதற்கு பதில் அளித்த இராணுவ கட்டளைத் தளபதி இவை தொடர்பில் தான் உரிய நடவடிக்கையை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி எடுப்பதாக தெரிவித்தார், என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House