யாழ்ப்பாண நகரின் 4ஆம் குறுக்குத்தெரு விபத்தில் முதியவர் மரணம்

யாழ்ப்பாண நகரின் 4ஆம் குறுக்குத்தெருவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமானார்.

ஊர்காவற்றுறை - தம்பாட்டியை சேர்ந்த சின்னத்தம்பி இலட்சுமணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர், கடந்த 6ஆம் திகதி 4ஆம் குறுக்குத்தெரு வீதியில் மோட்டார் சைக்கிளில் மீன் வியாபாரத்துக்காக சென்று கொண்டிருந்தபோது லேணர்ஸ் வாகனம் மோதியத்தில் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த அவர் உடனடியாக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த சி. இலட்சுமணன் பாரம்பரிய கூத்துக் கலைஞர் என்பதுடன் பாடல்களை பாடுவதிலும் வல்லவர். அத்துடன், கிராமத்தில் பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண நகரின் 4ஆம் குறுக்குத்தெரு விபத்தில் முதியவர் மரணம்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House