
posted 4th December 2021
இலங்கை முழுவதும் நேற்று வெள்ளிக்கிழமை திடீர் மின் விநியோகத் தடை ஏற்பட்டது. இதனால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன.
மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சில தினங்களுக்கு முன்னரும் இதுபோன்று நாட்டில் சில பாகங்களில் மின்தடை ஏற்பட்டிருந்தது.
கொத்மலையில் இருந்து பியகம வரையான பிரதான மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சுமார் 500 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின்னோட்டத்து கிடைக்கப் பெறாதமையினால் இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டிருந்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது.
அத்துடன், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எஸ் தில்லைநாதன்
மின்சாரத் தடை காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
மின்சாரத் தடை காரணமாக ரயில் சமிக்ஞைகளில் ஏற்பட்டுள்ள செயலிழப்பு காரணமாகவே குறித்த ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோக கட்டமைப்பில் ஏற்ட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
எனினும், கொழும்பின் சில பகுதிகளில் தற்போது மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடையை சில மணி நேரங்களுக்குள் சீர் செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House