மார்கழி 1ம் திகதி  26 கொரோனா தொற்றாளர்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் மாவட்டத்தில் மார்கழி மாதம் முதல் நாளே 26 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இவற்றில் தலைமன்னார் பகுதியிலுள்ள ஒரு பாடசாலையில் 12 மாணவர்களும் அடங்குவர் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் நாளாந்தம் கொரோனா தொடர்பாக வெளியிடும் தனது அறிக்கையில் 01.12.2021 அன்று மன்னார் மாவட்டத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 26 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 12 பேர் தலைமன்னார் பகுதியிலுள்ள ஒரு பாடசாலை மாணவர்களாவார்.

அதாவது தலைமன்னார் வைத்தியசாலையில் 15 பேரும், மன்னார் பொது வைத்தியசாலையில் 04 பேரும், மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும், முருங்கன். பேசாலை, நானாட்டான் வைத்தியசாலைகளிலும் மற்றும் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா ஒருவருமே இவ் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் (டிசம்பர்) முதல் நாளே 26 தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 2959 கொவிட் தொற்றாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்

இதுவரை 29 நபர்கள் கொவிட் தொற்றாளர்களாக இறந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்கழி 1ம் திகதி  26 கொரோனா தொற்றாளர்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House