மன்னாரில் கொவிட் தொற்றாளர் ஒருவர் மரணம். மொத்த எண்ணிக்கை 34 ஆக உயர்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் மாவட்டத்தில் 29.12.2021 அன்று கொவிட் தொற்றாளர் ஒருவர் உறுதிபடுத்தப்பட்ட நிலையில் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இறந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி. வினோதன் கொவிட் தொடர்பான தனது நாளாந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

29.12.2021 அன்று புதன்கிழமை மன்னார் மாவட்டத்தில் மன்னார் பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இந்நாளில் மரணத்தை தழுவிக் கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வளவு நாட்களாக இருந்து வந்த கொவிட் தொற்றாளர்களின் மரணம் 33 லிருந்து தற்பொழுது இது 34 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மாதம் (டிசம்பர்) மேற்கொள்ளப்பட்ட 20 பி.சி.ஆர். பரிசோதனையிலும் 3356 அன்டிஜென் பரிசோதனையிலும் 246 பேர் கொவிட் தொற்றாளர்களாக உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொவிட் தடுப்பூசியில் முதலாவது தடுப்பூசி 81,262 பேருக்கும். இரண்டாவது தடுப்பூசி 75,501 நபர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி 16,250 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் கொவிட் தொற்றாளர் ஒருவர் மரணம். மொத்த எண்ணிக்கை 34 ஆக உயர்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House