
posted 10th December 2021
தென்மராட்சியில் மக்கள் மருத்துவர் என அழைக்கப்படும் மருத்துவர் வைத்திய கலாநிதி சு.சி.அருளானந்தம் அவர்களின் அமுதவிழா நிகழ்வு 04/12 சனிக்கிழமை பிற்பகல் சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் ஓய்வுநிலை அதிபர் அ.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்றிருந்தது.
வைத்தியர் லயன் அருளானந்தத்தின் சேவையை நயந்து சாவகச்சேரி பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமுதவிழா நிகழ்வில் சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தினர்,கல்வயல் வேதவனப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர்,சாவகச்சேரி நகரசபை தவிசாளர்,உறுப்பினர்கள்,தென்மராட்சி இலக்கிய அணியினர், சாவகச்சேரி லயன்ஸ் கழகத்தினர்,சாவகச்சேரி இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர்,மருத்துவர்கள் ,தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாராட்டு உரைகளை வழங்கியிருந்தனர்.நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக "அருளானந்தம்" மலர் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. மலரினை யாழ்ப்பாண தமிழ் சங்கத் தலைவர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் வெளியிட்டு வைத்தார்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House