மக்கள் நலன்நோக்கி நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் - அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார்

நாம் எந்தவொரு திணைக்களத்துடனோ அல்லது நிறுவனத்துடனோ இருந்தாலும் மக்களுக்காகவே சேவைகளை மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் பிரஜைகள் குழுவும் மக்கள் நலன்நோக்கியே தனது பணியை முன்னெடுத்து வருகின்றது. இதற்கு நாம் அனைவரும் மக்கள் நலன் நோக்கி ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என வேண்டி நிற்கின்றோம் என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் பிரஜைகள் குழுவின் அங்கத்தவர்கள் வருட இறுதி ஒன்றுகூடலை புதன்கிழமை (22.12.2021) மன்னார் ஆஹாஸ் ஹொட்டலில் நடாத்தியது. இதில் மன்னார் மாவட்ட சகல திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இவ் ஒன்றுகூடல் இடம்பெற்றது

இதன்போது மன்னார் பிரஜைகைள் குழுத் தலைவர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் இங்கு தனது உரையில் தெரிவிக்கும்போது;

இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளாக பல்வேறு நிலைகளிலே நாம் தலைமைத்துவம் வகித்து மக்களை முன்னுரிமை படுத்தியவர்களாக இங்கு நாம் ஒன்றுகூடியுள்ளோம்.

நாம் பலதரப்பட்ட பொறுப்புகளில் இருப்பதுக்கு மக்களே காரணமாகும். மக்கள் இல்லையேல் நமக்கு இந்த நிலை இருக்காது.

நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் மக்களுக்காகவே. பிரஜைகள் குழுவானது மக்களுக்காகவே தங்களை அர்பணித்து சேவைகளை செய்து வருகின்றது

எச்சமயத்திலும் இக் குழுவுக்கும், அதிகாரிகளுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுமாகில் இவை யாவும் மக்களுக்காகவேதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளல்ல.

இங்கிருக்கும் ஒவ்வொரு தலைவர்களும் மக்களுக்காகவே உங்கள் சேவைகளை செய்து வருகிறீர்கள். அந்தவகையில் நாங்கள் மக்கள் சார்பகாக உங்களை வாழ்த்தி நிற்கின்றோம்.

நீங்கள் எதிர்நோக்கும் பல கஷ்டங்களையும் துன்பங்களையும் மக்களுக்கு ஆற்றும் சேவையின் போது எதிர்நோக்குகின்றீர்கள். அதனை உணரந்த பிரஜைகள் குழு இந்த ஒன்றுகூடுதலை ஒரு நன்றி கடனாக நடாத்துவதுமல்லாமல் அது உங்களுக்கு ஒரு புத்துணர்வு தரும் ஊக்கியாக அமையும் என்று நம்பியே.

துன்பமும், உயிர் காவு நோய்களும் மக்களைத் துவட்டி எடுத்துக்கொண்டிருக்கும் இக் கால கட்டத்திலும் மக்களுக்கு பணி செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

பிரஜைகள் குழுவாகிய நாங்கள் எவ்வாறு நம் சேவையைத் தொடருகின்றோமோ, அதேபோடன்று நீங்களும் எங்களுடன் கை கோத்து சேவையாற்றுவீர்கள் என நம்புகின்றோம். ஆனாலும் நாங்கள் அதிகாரிகளாகிய உங்கள் மூலம்தான் மக்களுக்குச் சேவையாற்ற முடியும்.

எனவேதான் நாங்கள் உங்கள் உதவியை நாடி நிற்கின்றோம்.

மக்கள் நலன்நோக்கி நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் - அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார்

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House