
posted 28th December 2021
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபைக்கு உட்பட்ட ஏ 14 வீதியானது மன்னார் செலான் வங்கியில் தொடங்கி மன்னார் பொது விளையாட்டு மைதானம் வரையும் மற்றும் மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட பேசாலை கடைதெருவினூடாக செல்லும் வீதிகளையும் புனரமைக்கும் பணிகளை இடைநிறுத்தியுள்ளமையால் போக்குவரத்துகளுக்கு பெரும் இடையூறுகள் இருந்து வருவதாக மன்னார் பிரஜைகள் குழு வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
மன்னார் பிரஜைகள் குழு வடக்கு மாகாண ஆளுநருக்கும் மற்றும் இது தொடர்பான அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதங்களில் தெரிவித்திருப்பதாவது
கடந்த பல மாதங்களாக மன்னார் நகரிலிருந்து தலைமன்னார் வரையிலான தரம் ஏ 14 வீதி அபிவிருத்தி வேலைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பில் கேடீஏடபிள்யூ (முனுயுறு) என்னும் ஓப்பந்த நிறுவனத்தினால் அபிவிருத்தி வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
ஆனால் இதில் முக்கியமாக திருத்தப்பட வேண்டிய மன்னார் நகர சபை எல்லைக்கு உட்பட்ட நகர சபையிலிருந்து மன்னார் பொது விளையாட்டுமைதானம் சந்தி வரையும் சுமார் 650 மீற்றர் பகுதி பிரதான வீதியும், இவ்வாறு மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட பேசாலை கிராமத்தில் உள்ள கடைதெருவினூடாக ஒரு கிலோ மீற்றர் வரையான பிரதான வீதியும் இன்னும் திருத்தப்படாது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
மன்னார் நகர சபையிலிருந்து ஸ்ரேடியம் சந்தி வரையுள்ள வீதி திருத்த வேலைகள் செய்வதற்கு ஆரம்பிக்கும்போது வீதி விதிகளின் படி அளவுகள் போதாமல் இருப்பதால் இந்த வீதியின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்கள், பொது அமைப்புக்கள், நலன் விரும்பிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை உறுப்பினர்கள் யாவரும் மாவட்ட அரசாங்க அதிபரினால் அழைக்கப்பட்டு பொதுவான அபிப்பிராயம் எடுக்கப்பட்டு யாவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இவ் வீதி அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்பிரகாரம் இவ் அபிவிருத்தி வேலையானது மன்னார் நகர சபைக்கு முன்னால் இருந்து செலான் வங்கி வரை கொண்டுவரப்பட்டு பின் நிறுத்தப்பட்டுள்ளது. அதுவும் இது முழுமையாக செய்யப்படவில்லை.
இவ்விடத்தில் மக்கள் செறிந்து வாழ்வதுடன் ஒரு முக்கிய பிரதான வீதியாகவும் மக்கள் அதிகமாக போக்குவரத்து செய்யும் இடமாகவும் காணப்படுவதால் பாதசாரிகளுக்குரிய நடைபாதையோ, பாதசாரிகள் கடவையோ மற்றும் நீர்வடிகால் அமைப்போ செய்யப்படாது முழுமைபெறாது காணப்படுகின்றது.
இதற்கான காரணங்களையும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெளிவுப்படுத்தாத நிலையில் இருப்பதால் பேசாலையில் விடுபட்ட வீதியையும் மன்னார் நகரிலுள்ள இவ்விரு வீதிகளையும் திருத்தி அகலப்படுத்தி தருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி வேண்டுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையினைத் துரிதப்படுத்த, மன்னார் ஆயர், அரசாங்க அதிபர், வீதி அபிவிருத்தி அதிகார சபை மாகாண பணிப்பாளர், மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் மன்னார் நகர சபை தவிசாளர் ஆகியோரின் கவனத்துக்கும் மன்னார் பிரஜைகள் குழு கொண்டு சென்றுள்ளது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House