மகத்தான கௌரவிப்பு

கல்முனை மாநகரின் முதலாவது பாடசாலையும், 138 வருடங்கள் பழமை வாய்ந்ததுமான கல்முனை (தேசியப்பாடசாலை) அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற வீ.பிரபாகரன், மேற்படி பாடசாலை சமூகத்தினால் இன்று பாராட்டி கௌரவிக்கபட்டுள்ளார்.
இதனையொட்டிய சேவை நலன் பாராட்டு விழாவும், அன்னார் பற்றிய விசேட நினைவு மலர் வெளியீடும், பாடசாலை அதிபர் எஸ்.கலையரசன் தலைமையில், பாடசாலை நல்ல தம்பி மண்டபத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், ஓய்வு பெற்ற அதிபர் பிரபாகரனுக்கு மகத்தான வரவேற்பும், கௌரவிப்பும் அளிக்கப்பட்டது.

பழம் பெருமை பெற்ற இப்பாடசாலையின் வளர்ச்சியிலும், கல்வி முன்னேற்றத்திலும் அளப்பரிய பங்காற்றிய ஓய்வு பெற்ற அதிபர் பிரபாகரன் உதவி அதிபராக 7 வருடங்களும் பிரதி அதிபராக 10 வருடங்களும் பொறுப்பு அதிபராக 11 வருடங்களும் பெரும் பணியாற்றியுள்ளார். அதிபர் சேவை தரம் 1 கல்வி நிருவாக சேவை தரம் மூன்றையும் சேர்ந்த அதிபர் பிரபாகரன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாவது தொகுதி விஞ்ஞான பாட்டதாரிகளுள் ஒருவருமாவார்.

கல்முனை அதிபர்கள் சங்கத்தலைவராக பல வருடங்கள் இருந்து வந்த அதிபர் பிரபாகரன், இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பொது நிலையினர் மத்தியிலிருந்து தெரிவாகும் உப தலைவராக ஒருவருட காலம் இருந்த பெருமைக்குரியவருமாவார்.

இன்று நடைபெற்ற சேவை நலன் பாராட்டு விழாவையொட்டி அன்னாரது நினைவாக பிரவாகம் எனும் சிறப்பு மலரொன்றும் வெளியிடப்பட்டது.

பெருந்தொகையான பெற்றோர்கள் மாணவர்கள் நலன் விரும்பிகள் கலந்து கொண்ட இந்த மண்டபம் நிறைந்த விழாவில் முக்கிய பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். குறிப்பாக முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எஸ்.அப்துல் ஜலீல், வே. மயில்வாகனம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவலகள் திணைக்கள பணிப்பாளர் எஸ்.நவனீதன் கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், கால்நடை உற்பத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஐ.எம்.பாஸீல், கல்முனை தமிழ் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.சரவணமுத்து முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி திருமதி கலா தயாசீலன் உட்பட பல முக்கியஸ்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்


முன்னைய தேனாரம் செய்தியை வாசிக்க;
சேவை நலன் பாராட்டு

மகத்தான கௌரவிப்பு

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House