பொறுப்பை ஏற்க வேண்டும்.
பொறுப்பை ஏற்க வேண்டும்.

கல்முனை மாநரிலுள்ள பிரபல பாடசாலையாகிய உவெஸ்லி உயர்தர தேசியப் பாடசாலையின் அதிபராகவிருந்து காத்திரமான கல்விப் பணியாற்றி சிறந்த முகாமைத்துவத்தை வழங்கிய அதிபர் வடிவேல். பிரபாகரன் காலத்தின் தேவை கருதி எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

இவ்வாறு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் குறிப்பிட்டார்.

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசியப் பாடசாலையின் முன்னாள் அதிபர் வடிவேல். பிரபாகரனின் சேவை நலன் பாராட்டு விழாவும் "பிரபாகம்" சிறப்பு மலர் வெளியீடும் இக் கல்லூரி முதல்வர் செ.கலையரசன் தலைமையில் மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் அங்கு மேலும் பேசுகையில்.

உருவத்தில் உயர்ந்தவரான அதிபர் பிரபாகரன் உள்ளத்திலும் உயர்ந்தவராகவுள்ளமை தனிச் சிறப்பாகும். இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த இவர் பதவி மோகம் இன்றி அதிபர் பதவியை அலங்கரித்த ஆணவம் அற்ற கல்விப் பணியாளர். இதனால் இன்று அனைத்து தரப்பினரும் அணி திரண்டு பெருவிழா எடுப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

நீண்ட கல்விப்பயணத்தைக் கொண்ட அதிபர் பிரபாகரன் எனக்கும். இப் பாடசாலை அதிபர் கலையரசனுக்கும் ஆலோசனை வழங்குபவராக இருக்க வேண்டும் என்றார்.

இந் நிகழ்வில் பிரபாகம் சிறப்பு மலரை எழுத்தாளர் சிவ வரதராஜன் அழகுற தொகுத்து நூல் வெளியீட்டுரை நிகழ்த்தினார்.

பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House