
posted 13th December 2021
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவ உடனடி பொருளாதார பொதி திட்டம் ஒன்றை இந்தியா உருவாக்கி வருகின்றது. இந்த உதவிகள், உணவு மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றம் நாணய பரிமாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி 'எக்கனமிக் ரைம்ஸ்' பத்திரிகையே இந்த விடயத்தை கடந்த சனிக்கிழமை பதிப்பில் வெளியிட்டுள்ளது.
நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு இலங்கைக்கு கடன் வழங்குவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
எல்லைகளை திறப்பதன் மூலம் கோவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட சுற்றுலா துறையை புதுப்பிக்க இலங்கை முயற்சிக்கிறது. மேலும், அதிகமான இலங்கையர்கள் வேலை தேடுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்வதால் பண வரவும் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்தியாவின் உடனடி பொருளாதார தீர்வு பொதி இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் என இரு நாடுகளும் அடையாளம் காண்கின்றன என்று இலங்கை அரசின் அறிக்கையை மேற்கோள்காட்டி எக்கனமிக் ரைம்ஸ் கூறியுள்ளது.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House