பூஸ்டர் தடுப்பூசி

கிழக்கிலங்கையிலுள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும், மூன்றாவது தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களின் திட்டமிடல்களுடனும், ஆலோசனையின் பேரிலும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொவிட் - 19 ஒழிப்புக்கான இருதடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட 30 வயதுக்கு மேற்பட்ட சகலரும் இந்த மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது அவசியமென விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

தற்பொழுது உலகை அச்சுறுத்த ஆரம்பித்துள்ள ஒமிக்ரோன் பிறழ்விலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி அவசியமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கொவிட் - 19 இரு தடுப்பூசிகளையும் வெற்றிகரமாக ஏற்றிக்கொண்டது போல் குறித்த மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியையும் தவறாது ஏற்றிக் கொள்ள 30 வயதுக்குமேற்பட்ட கிழக்கு மக்கள் முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஏ.ஆர்.எம்.தௌபீக் கோரியுள்ளார்.

ஒமிக்ரோன் பிறழ்வு பரவாமல் கிழக்கைக் காப்பாற்ற இதன் மூலம் உதவுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். கே.எல்.எம்.றைஸ், தமது அலுவலகத்தில் 3 ஆம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

இங்கு இந்த தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில் பொது மக்கள் ஆர்வம்காட்டி வருவதுடன், பெண்கள் அதிகமாகவருவதையும் அவதானிக்க முடிகின்றது.

பூஸ்டர் தடுப்பூசி

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House