
posted 26th December 2021
"வடக்கில் கரையோர மீனவர்களை முற்றாக அகற்ற வேண்டும் என்று சிலர் சிங்கள அரசின் கீழ் வேலை செய்கின்றார்கள்." இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
"போர் நிறைவடைந்த காலம் முதல் வடக்கு மீனவர்களின் துயரம் தொடர்கின்றது.வலைகள், உடைமைகள் எனப் பலவற்றை இழந்துள்ளனர்.
இலங்கை அரசும், கடற்படையும் இணைந்து திட்டமிட்டுத்தான் இந்த எல்லை மீறல்களை அனுமதிக்கின்றனர்.
இதன் நோக்கம் வடக்கு கரையோரப் பரப்புகளிருந்து மீனவர்களை அகற்றுவதே ஆகும்.
எமது மீனவர்களின் வளங்களை அழிக்கவே வேண்டும் என்று இந்திய மீனவர்களை இலங்கைக் கடல் பரப்புக்குள் கடற்படையினர் அனுமதிக்கின்றனர்.
அத்துடன் தமிழ் அமைச்சராக டக்ளஸ் தேவானாந்தா இருந்துகொண்டு இதற்குத் துணை போகின்றார்.
அவர் அமைச்சராகப் பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், இன்னமும் இந்திய மீன்வர்களின் அத்துமீறல் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை .
மானமுள்ள தமிழராக இருந்தால் அவர் எப்பவோ பதவி விலகியிருக்க வேண்டும்" என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House