posted 10th December 2021
இலங்கையில் வடபிரதேசத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் உள்ளூர், வெளியூர் மற்றும் கொழும்புக்கான இரவு நேர சேவைகள் என்பன டிசெம்பர் 15 முதல் யாழ்ப்பாணத்தில் உள்ள புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்திக்குறிப்பில், தனியார் பஸ்களின் உள்ளூர் சேவை பஸ்கள் நெடுந்தூர பஸ் நிலையத்தில் இருந்தது புறப்பட்டு தற்போது இயங்கி வரும் இடங்களில் 10 நிமிடங்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும். அதே போல் வெளியிடங்களில் இருந்து வரும் பிரயாணிகள் நெடுந்தூர பஸ் நிலையத்தில் இறக்கப்படுவர்.
இ.போ.ச பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் வெளிமாவட்டங்களுக்கும் செல்லும் நீண்ட தூரத்துக்கு பயணிக்கும் பஸ்கள் ஆஸ்பத்திரி வீதியினூடாக முத்திரச்சந்தியை அடைந்து அங்கிருந்து கே.கே.எஸ் வீதியூடாக சென்று பிரதான வீதியை அடைந்து வெளிமாவட்டங்களுக்கான பயணத்தை மேற்கொள்ளும் என்பதோடு, வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பஸ்களும் இப் பாதையையே பயன்படுத்தவேண்டும் என்பதுடன் இப்பாதை ஒழுங்கு முறையானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இ.போ.ச பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் வெளிமாவட்டங்களுக்குச் செல்லும், நீண்ட தூரத்துக்கு பயணிக்கும் பஸ்கள் ஆஸ்பத்திரி வீதியூடாக வேம்படிச் சந்திக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House