
posted 21st December 2021
வடமராட்சிப் பிரதேசத்தில் விவசாயிகள் இம் முறை காலம் பிந்திய நிலையில் புகையிலைச் செய்கையில் மும்முரமாக ஈடுகின்றனர்.
கடந்த சில வாரங்கனாக தொடர்ச்சியாக மழை பெய்தமையால் புகையிலைச் செய்வதற்காக நிலங்களைப் பண்படுத்த முடியாமல் போய்விட்டது.
தற்போது மழை மிகக் குறைவடைந்த நிலையில் அவசர அவசரமாக விவசாயிகள் நிலங்களைப் பயன்படுத்தி புகையிலை நாற்றுக்களை நடுகை செய்வதில் ஈடுபட்டு உள்ளனர்.
இதே வேளை புலோலி, அல்வாய், கரவெட்டி, உடுப்பிட்டி ஆகிய இடங்களில் விவசாயிகளால் அமைக்கப்பட்ட நாற்று மேடைகளிலிருந்தும், வடமராட்சிப் பிரதேசத்தில் பாரிய அளவில் வருடந்தோறும் பொலிகண்டியில் அமைக்கப் பட்டு வரும் நாற்று மேடைகளிலிருந்தும் புகையிலை நடுகைக்கான நாற்றுக்களை விவசாயிகள் கொள்வனவு செய்து நடுகை செய்து வருகின்றனர். தற்போது ஒரு புகையிலை நாற்று 10 ரூபாய் முதல் 13 ரூபாய் வரை விற்பனையாகி வருகின்றன.
கடந்த வருடம் யாழ் குடா நாட்டு விவசாயிகள் புகையிலைச் செய்கையில் அதிக ஆர்வம் காட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House