
posted 10th December 2021
கிழக்கிலங்கையைச் சேர்ந்த முக்கிய தமிழ்ப்பிரதேசமான காரைதீவு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட் கிழமை சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படவிருக்கின்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆட்சி அதிகாரத்திலிருக்கும் காரைதீவு பிரதேச சபையின் குறித்த வரவு செலவுத்திட்டத்தை 13 ஆம் திகதி நடைபெற விருக்கும் சபை அமர்வில் தவிசாளர் கிருஷ்ண பிள்ளை ஜெயசிறில் சமர்ப்பிப்பார்.
இதனையடுத்து வரவு செலவுத்திட்டம் தொடர்பாக சபை அமர்வில் உறுப்பினர்களது உரைகள் இடம் பெற்று சபையின் அங்கீகாரத்திற்காக விடப்படும்.
பெரும்பாலும் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பே இடம்பெறுமெனவும், வழமைபோல் தீர்மானமிக்க வாக்குகளாக அமையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாகவே வாக்களிப்பரெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் தமிழரசுக்கட்சி சார்பில் 4 உறுப்பினர்களையும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 2, சுயேச்சையில் 3, தோடம்பழ சின்ன உறுப்பினர் ஒருவர், சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இருவரையும் கொண்டதாக இச்சபை உள்ளது.
முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிக்களார் பிறந்த மண் காரைதீவு என்பது குறிப்பிடத்தக்கது

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House