
posted 2nd December 2021
யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து புதன்கிழமை (01.12.2021) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தூர் வடக்கு , ஆவரங்கால் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சிவபாலன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனங்களப்புப் பகுதியில் தென்னம்தோட்டம் ஒன்றைப் பராமரித்து வரும் அவர், தோட்டத்துடன் இணைந்த வீட்டில் வசித்தும் வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக அவரின் நடமாட்டத்தை அயலவர்கள் அவதானித்து இருந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இவர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House