
posted 5th December 2021
வடக்குக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கும் சனிக்கிழமை (05.12.2021) விஜயம் மேற்கொண்டார்.
நேற்று காலை 9 மணி அளவில் யாழ். மத்திய பஸ் நிலையப் பகுதிக்கு விஜயம் செய்த அவர், அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியதுடன் தனது 43 ஆவது படையணி தொடர்பான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தார்.
ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து விலகிய பின்னர் சம்பிக்க ரணவக்க புத்தி ஜீவிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய அமைப்பே 43 படையணி ஆகும்.
அத்துடன் தான் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அவர் ஆராய்ந்ததுடன் யாழ்ப்பாண நெடுந்தூர பஸ் நிலையம், யாழ். மாநகரசபை புதிய கட்டடம் போன்றவற்றை பார்வையிட்டு தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் நெடுந்தூர புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட பின்னரும் பாவனைக்கு வராமல் இருப்பது தொடர்பாக அப்பகுதியில் உள்ள வர்த்தகர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House