
posted 27th December 2021
காயமடைந்த மணல் கடத்தல் கும்பல்
யாழ்ப்பாணம் அரியாலை நெளுக்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்தபோதும் நிறுத்தாமல் சென்றதனால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்ததுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் அரியாலை முள்ளியைச் சேர்ந்த 27 வயதுடைய யசிந்தன் என்பவரே காயமடைந்தார். அவர் பொலிஸ் காவலில் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அத்துடன், மணல் ஏற்றிய பெட்டியுடன் உழவு இயந்திரம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் விளக்க மறியலில்
முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் வெள்்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதோடு பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் தூஸ்பிரயோகத்துக்கு முயற்சித்தாக தெரிவிக்கப்பட்டு, சிறுவர் பெண்கள் பாதுகாப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து நேற்று முன் தினம் முல்லைத்தீவு பொலிஸாரால் குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
சாத்தானின் கோயில்கள் பிள்ளையார் கோயில்களா?
பிள்ளையார் கோயில்கள் சாத்தானின் கோயில்கள் எனக் கிறித்தவர் கருதினால், பிள்ளையார் கோயில்கள் உருவ வழிபாட்டு இடங்கள் காபிர்களின் உறைவிடங்கள் என முகமதியர் கருதினால், இலங்கை அவர்களுக்குரிய நாடு அல்ல. அவர்கள் கருத்தும் அவர்கள் நோக்கமும் கொண்ட நாடுகள் பல உலகில் உள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ளார் ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவரும் சைவப் பெரியாருமான மறவன்புலவு க. சச்சிதானந்தம்.
வலிகாமம் பகுதியில் களவாடப்பட்ட பிள்ளையார் சிலைகள் தொடர்பில் பொலிஸார் ஒருவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து பல சைவ ஆலயங்களில் களவாடப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டன. இது குறித்து நேற்று மறவன்புலவு சச்சிதானந்தம் விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
“சூசைராசா கஜீபன் கிறித்தவர். வலிகாமத்தில் உடைத்த பிள்ளையார் சிலைகள் தொடர்பில் முதலில் கைதானவர் சூசைராசா. அந்தப் பிள்ளையார் சிலைகள் போய்ச் சேர்ந்தன முகமதியரின் வணிக நிறுவனத்திடம். கொழும்பு ஆர்மர் தெரு பாத்திமா பள்ளிக்கு முன்புள்ள முகமதியர் வளாகத்தில் வலிகாமம் சிலைகள் உள்ளிட்ட 17 பிள்ளையார் சிலைகள் பல சிவலிங்கங்கள் மற்றும் சைவக் கோயில் சிலைகளை நேற்று (26.12.2021) கண்டுபிடித்த காவல்துறையினரைப் பாராட்டுகிறேன்.
“இந்தச் சிலைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர் வழிபட்ட தொல்லியல் கூறுகள். இவற்றை உடைத்தவர், இவற்றைப் பெயர்த்தவர், இவற்றைக் கொண்டு சென்ற வாகனத்தார், சேமித்து வைத்த முகமதிய வளாகத்தார் யாவரையும் தொல்பொருளியல் சட்டங்களில் பிணையில் விடமுடியாத சட்டங்களின் கீழ் கைது செய்து உடனடியாக சிறையில் அடைக்குமாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்
“சைவர்களின் நம்பிக்கையின் அடையாளம் பிள்ளையார். சைவர்களின் உணர்வுகளின் உறைவிடம் பிள்ளையார். கிறித்தவர் உடைக்கிறார். முகமதியர் பின்னணியில் உள்ளார். ஆபிரகாமிய மதத்தவர் இலங்கைச் சைவ மரபுகளை உடைத்தெறியும் கண்ணோட்டத்தின் வெளிப்பாடு எனக் கொள்ளலாமா?
“வலிகாமத்தில் நிகழ்ந்தவை முதல் நிகழ்வுகள் அல்ல. ஏற்கனவே வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப்பகுதி, வன்னியில் போர்க்காலத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களின் நிகழ்வுத் தொடர்ச்சியே கடந்தவாரம் வலிகாமத்தில் 5 பிள்ளையார் கோவில் சிலைகள் உடைப்பு. கிறித்தவரும் முகமதியரும் சைவ மரபுகளை அழிக்க உந்துதல் கொடுப்பவர் யார்?
“வவுனியா, செட்டிகுளம், மன்னார் தள்ளாடி, ஆட்காட்டி வெளி, வெள்ளாங்குளம், சிலாவத்துறை, மடு - பரப்புக்கடந்தான், பூநகரி கேரதீவு, தென்மராட்சி - மிருசுவில், அம்பாறை கஞ்சிக்குடியாறு எனத் தொடர்ச்சியாகப் பிள்ளையார் சிலைகளை உடைப்பதிலும் பிள்ளையார் கோயில்களை அகற்றுவதிலும் ஆகக் கிறித்தவரும் முகமதியரும் இணைந்து முனைந்துள்ளனர்.
“கிறித்துவ மதத் தலைவர்களோ முகமதிய மதத் தலைவர்களோ தத்தம் மதத்தவர் இவ்வாறு செய்வதால் இலங்கையில் மத நல்லிணக்கம் சிதறும் தமிழரிடையே பிளவு வரும் என்பதை வெளிப்படையாகக் கூறவில்லை. சைவரிடம் இதுகாறும் மன்னிப்புக் கோரவில்லை.
“கிறித்தவ மதத் தலைவர்கள் மன்னார், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களிலும் பிள்ளையார் சிலைகளை உடைப்பதை ஊக்குவிக்கிறார்கள். இப்பொழுது வலிகாமத்தில் நிகழ்ந்தவற்றை கிறித்தவ, முகமதிய மதத்தலைவர்கள் ஊக்குவிக்கிறார்களா? வெளிப்படையாக அவர்கள் சொல்ல வேண்டும்.
“பிள்ளையார் கோயில்கள் சாத்தானின் கோயில்கள் எனக் கிறித்தவர் கருதினால், பிள்ளையார் கோயில்கள் உருவ வழிபாட்டு இடங்கள் காபிர்களின் உறைவிடங்கள் என முகமதியர் கருதினால், இலங்கை அவர்களுக்குரிய நாடு அல்ல. அவர்கள் கருத்தும் அவர்கள் நோக்கமும் கொண்ட நாடுகள் பல உலகில் உள்ளன.
“சைவக் கோயில்கள் உள்ள நாடுகளே திருக்கயிலாயம் தொடக்கம் கதிர்காமம் வரை நீண்டு காந்தாரம் தொடக்கம் ஐராவதி வரை அகன்ற பரத கண்டம். யுகங்கள் ஊடாகப் பிள்ளையாரை வழிபட்டு வந்தவர்கள் வருபவர்கள் இந்த நிலப்பரப்பில் வாழ்பவர்கள். தமிழர், சிங்களவர் என வேறுபாடின்றி அனைவரும் பக்தியோடும் பரவசத்தோடு உணர்வோடும் மண்ணின் மைந்தர்களாய்ப் பிள்ளையாரை வழிபடுகின்ற தீவே இலங்கைத் தீவு
“இங்குள்ள பிள்ளையார் கோவிலை இடிக்க முயல்பவர்கள் ஆபிரகாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள். பிள்ளையார் கோவிலை உடைக்க ஊக்குவிக்கும் ஆபிரகாமிய மதக் கும்பல்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறினால் சைவர்கள் தம் உணர்வின் அடையாளங்களை, தம் நம்பிக்கையின் இருப்பிடங்களைப் பக்தியோடும் வழிபாட்டோடும் பண்பாட்டோடும் இணைத்துத் தம் முன்னோர் விட்ட வழியில் வாழ்வர்” - என்றுள்ளது.
சர்வதேச முன்னிலையில் பொதுசன வாக்கெடுப்பு
சர்வதேச கண்காணிப்புடன் கூடிய பொதுசன வாக்கெடுப்பு, தமிழர் தாயகப் பகுதியில் இடைக்கால சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை, இலங்கையின் ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்குதல், இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தல் மற்றும் இனப்படுகொலை குற்றத் தடுப்பு மற்றும் தண்டனை மற்றும் சித்திரவதைக்கு எதிரான தடுப்பு தொடர்பான மாநாட்டின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கை - ஆகிய கோரிக்கைள் உள்ளடங்கிய கடிதமொன்று, இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கிவரும் முன்னணி தமிழ் புலம்பெயர் அமைப்புக்களான வடஅமெரிக்க தமிழ் சங்கம் (குநவுNயு), இலங்கை தமிழ் சங்கம், ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு (வுயுருPயுஊ) அமெரிக்க தமிழ் செயல்பாட்டு குழு (ருளுவுயுபு), நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் உலகத் தமிழர் அமைப்பு ஆகிய ஆறு முன்னணி அமெரிக்க தமிழ் அமைப்புக்களே இந்தக் கோரிக்கைளை முன்வைத்திருக்கின்றன. முதன்முறையாக, அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ்நாடு தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் முன்னணி புலம்பெயர் அமைப்புக்களும், ஈழத் தமிழர் புலம்பெயர் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. இதில், பெட்னா என அழைக்கப்படும் வட அமெரிக்க தமிழ் சங்கம், அமெரிக்காவில் 40இற்கு மேற்பட்ட இந்திய தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை உள்ளடக்கியிருக்கும் பிரதான இந்திய தமிழ் புலம்பெயர் அமைப்பாகும்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்த அலைனா ரெப்லிஸின் பதவிக்காலம் முடிவடைந்து வெளியேறியிருக்கும் நிலையில், புதிய அமெரிக்க தூதுவராக அறிவிக்கப்பட்ட ஜூலி -ஜியோன் சுங்கின் நியமனம், தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜூலி, விரைவில் அவரின் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியிலேயே அமெரிக்க தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், புதிய தூதுவருக்கான வாழ்த்துச் செய்தியுடன், மேற்படி கோரிக்கைகள் அடங்கிய, கடிதத்தை அவருக்கு அனுப்பிவைத்துள்ளன.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House