
posted 13th December 2021
அம்பாறை மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக, தற்பொழுது மேலதிக அரசாங்க அதிபராகக் கடமையாற்றி வரும் வேத நாயகம் ஜெகதீஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை மாவட்ட அரசாங்க அதிபராக (மாவட்ட செயலாளர்)க் கடமையாற்றிவந்த டி.எம்.எல்.பண்டார நாயக்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளராகப் பதவி உயர்வுடன் நியமனம் பெற்று சென்றதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே, பதில் மாவட்ட அரசாங்க அதிபராக ஜெகதீஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இருவருக்கான பதில் நியமனத்தை வழங்கியுள்ளது.
இலங்கை நிருவாக சேவை தரம் ஒன்றைச் சேர்ந்த பதில் அரசாங்க அதிபர் ஜெகதீஸன் ஏற்கவே அம்பாறை மாவட்டத்திலுள்ள பல பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி பெரும் அனுபவம் கொண்டவராவார்.
கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த பதில் அரசாங்க அதிபர் வே.ஜெகதீஸன், மாவட்டத்தில் வாழும் மூவின மக்களதும் நன்மதிப்பைப் பெற்றவருமாவார்.
பிரபல கவிஞரும், எழுத்தாளருமான “முத்தமிழ் திலகம்” அமரர் அக்கரை மாணிக்கம் எனும் வ.ஞான மாணிக்கத்தின் மருமகனுமாவார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House