பட்டம் விடும் சீசன்சோபை இழந்த நிலை

வடமராட்சிப் பிரதேசத்தில் இம்முறை பட்டம் விடும் சீசன்சோபை இழந்த நிலை காணப்படுகிறது.

தமிழ் மக்களின் பண்பாட்டு அம்சங்களில் ஒன்றான பட்டம் விடுதல் நிகழ்வுகள் வருடந்தோறும் ஒக்ரோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வடமராட்சிப் பிரதேசத்தில் காலங் காலமாக நடைபெற்று வருகின்றன.

பட்டம் விடும் இக்காலங்களில் விதம் விதமான வடிவமைப்பிலும், இரவு வேளைகளில் மின் அலங்காரங்களுடனும் பட்டங்கள் விண் கூவும் ஒலியுடன் வானத்தில் பறக்கும் காட்சிகளை மக்கள் ரம்மியாக இரசித்து வருவார்கள்.

பட்டம் விடுதலின் உச்ச நிகழ்வு தைப் பொங்கல் தினத்தில் இடம் பெறுவது வழமை. அன்றைய தினம் சமூக நிறுவனங்களால் ஊர்கள் தோறும் பட்டம் விடும் போட்டி இடம் பெறுவதுடன், பிரமாண்டமான போட்டி வல்வெட்டித்துறை கடற்கரை மைதானத்தில் பாரிய விழாவாக நடைபெறுவதுண்டு.

இப் போட்டிகள் கடந்த (2020) வருடம் கொரோனா தொற்று நோய் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தன. இம் முறை இப் போட்டிகள் தொடர்பாக அறிவிப்புக்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

பட்டம் விடும் சீசன்சோபை இழந்த நிலை

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House