
posted 21st December 2021

பட்டம் விட்ட இளம் குடும்பஸ்தரை சுமார் 40 அடி உயரத்துக்கு பட்டம் தூக்கிச் சென்ற சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (21.12.2021) வடமராட்சியில் இடம்பெற்றது.
பருத்தித்துறை - புலோலி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
நேற்று இளைஞர்கள் பலர் கூடி அந்தப் பகுதியில் பெரிய பட்டம் ஒன்றை பறக்க விட்டனர். பின்னர் அந்தப் படத்துடன் இன்னொரு பட்டத்தை இணைத்து விடுவதற்கு முனைந்தனர். அப்போது, இரண்டாவது பட்டத்தின் 'முச்சை' கயிற்றை பிடித்திருந்தவரும், முதல் பட்டத்தின் பறப்பு வேகத்தில் பறக்க ஆரம்பித்தார்.
சுமார் 40 அடி உயரம் வரை பறந்தவரை கீழிறக்க முடியாமல் இளைஞர்கள் திணறினர். சுமார், 5 நிமிடங்கள் பறந்த நபர் கயிற்றுடன் வழுக்கி வந்து சுமார் 20 அடிவரை கீழிறங்கிய பின்னர் கையை விடவே அவர் கீழே விழுந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு பாரதூரமான காயங்கள் எவையும் தெய்வாதீனமாக ஏற்படவில்லை என்று தெரிய வருகின்றது.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House