
posted 30th December 2021
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் 300 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.
4.3 மெக்னிடியுட் அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
யாழ்., அனலைதீவில் பாம்பு தீண்டியதால் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் வீடு திரும்பி பத்து நாட்களின் பின் உயிரிழந்துள்ளார்.
அனலைதீவு, 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது 47) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி வீட்டு முற்றத்தில் நின்றிருந்தபோது இனந்தொியாத வகை பாம்பு ஒன்று அவரைத் தீண்டியுள்ளது.
அதற்குச் சிகிச்சை பெற்று மறுநாள் அவர் வீடு திரும்பியுள்ளார். பின் கடந்த 26ஆம் திகதி அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டமையால் அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமையால் உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House