நான் மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாகக் கூறவில்லை - வட/ஆளுநர் ஜீவன் தியாகராஜா
நான் மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாகக் கூறவில்லை - வட/ஆளுநர் ஜீவன் தியாகராஜா

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா

மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக தான் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

கடற்படைக்கு மாதகல் காணிகளை வழங்க வடக்கு மாகாண ஆளுநரும் உடந்தையாக உள்ளார் என தெரிவித்து, சில ஊடகங்களில் நேற்று செய்தி வெளிகியிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பில் நேற்று தனியார் நிறுவனத்தின் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஆளுநர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;

நேற்று நான், காணி உரிமையாளர்களுடன் பேசுவதாக வெளியான செய்தி பிழையானது.

இன்றே (02.11.2021) முதன்முதலாக, காணி உரிமையாளர்களுடன் நான் நேரடியாக கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளேன்.

இதற்கமைய, காணி உரிமையாளர்களுடன் பேசி, காணியின் உறுதிகளை சரி பார்த்து, காணி உரிமையாளர்களின் நிலைப்பாடுகளை அறிந்த பின்னரே முடிவுகளை எடுக்க முடியும்-என்றார்.

நான் மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாகக் கூறவில்லை - வட/ஆளுநர் ஜீவன் தியாகராஜா

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House