நாடெங்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்ட குதூகலம்

நாடளாவிய ரீதியில் இவ்வருடம் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான நிகழ்வுகள் கோவிட் முடக்கங்கள் கொஞ்சம் தளர்ந்த காலகட்டத்தில் களைகட்டியிருக்கின்றது. குறிப்பாக இலங்கையின் தலை நகர் கொழும்பில் கிறிஸ்மஸ் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், இம்முறை கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கொரோனா அச்சுறுத்தலுக்கு மதியிலும் சிறப்பாக கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பில், இன்று (24.12.2021) நள்ளிரவு யேசுக் கிறீஸ்து பிறப்பதற்கு முன்னரே வெடிகள் கொழுத்தி ஆரவாரங்கள் இடம்பெறுத் தொடங்கிவிட்டன.

கொழும்பு மாநகர சபை உட்பட பல்வேறு முக்கிய இடங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, யேசு இரட்சகரின் பிறப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைவரிலும் பூரிப்பை கொடுப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

அத்துடன், கொழும்பு மாநகரின் பல பாகங்களிலும் பாலன் பிறப்பின் கொட்டில்களும், பாலன் பிறப்பைப் பிரதிபலிக்கும் சுரூபங்களும் விற்பனைக்குப் போடப்பட்டள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

மேலும், இன்று நள்ளிரவு ஆராதனைகள், கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மறை மாவட்டங்களில் இடம் பெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை நடாத்துமாறு சுகாதார பகுதியினர் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை விடுவித்திருப்பதற்கமைய, ஆராதனைகளில் பங்குபெறும் அனைத்து மக்களையும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு மறைமாவட்ட ஆயர்கள் பங்கு மக்களைக் வேண்டுகின்றனர்.

நாடெங்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்ட குதூகலம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House