நத்தார் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தி -  அங்கஜன் இராமநாதன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
நத்தார் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தி -  அங்கஜன் இராமநாதன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன்

தொற்றுப் பரவலுக்கு சிறிதேனும் இடமளியாது மத சுதந்திரத்தை அனுபவித்திடுவோம் எனப் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்;

இறைமகன் இயேசு பிரான் உதித்த தினமான இன்று கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடும் உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது நத்தார் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தன் உயிரை இவ்வுலகிற்காக ஈந்த நாயகனின் பிறப்பைக் கொண்டாடும் திருநாள் இன்று. இயேசுநாதர், அன்பு, தியாகம், உண்மை, நீதி போன்ற உயர் குணங்களை தன்னகத்தே கொண்டு அதனை மனித சமுதாயத்திற்கு போதித்தவர். ஒவ்வொரு மனிதர் மனத்திலும் அன்பு, கருணை, காருண்யம் போன்ற தெய்வ குணங்கள் மேலோங்க வேண்டும். இவ்வுலக வாழ்க்கையில் ஒளியேற்றுவதே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தம். அந்தவகையில் மனிதநேயத்திற்கு எதிராக எழுந்து நிற்கும் சகல சக்திகளையும் மௌனிக்கச் செய்து அமைதியான வழியில் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப நத்தார் பண்டிகை நல் வழிகாட்டியாக அமையும் என நம்புகிறேன். உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்தும், அனைத்து நோய் நொடிகளில் இருந்தும் இரட்சகர் யேசு பிறந்து எம்மை எல்லாம் விடுவித்து, சுபீட்சமானதொரு வாழ்வு தரவும், மீண்டும் இவ்வுலகு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைக்க வேண்டுமென யேசு வைப்பார் என விரும்புகிறேன் என மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தி -  அங்கஜன் இராமநாதன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House