தேடுதல் பலனளிக்கவில்லை.  கரையொதுங்கின  மீனவர்களின் சடலங்கள்

ஞாயிற்றுக்கிழமை (12) கடலில் நீந்தி கரைசேர முற்பட்ட மீனவரும் இவரை காப்பாற்ற எத்தணித்த கடலில் காணாமல் போன இரு மீனவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் கோந்தப்பிட்டியில் தங்கி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த யாழ் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் கடற்பரப்பில் தங்கள் வெளிக்கள படகு இயந்திரத்தை பரிசோதித்து பார்ப்பதில் ஈடுபட்டபோது அச்சமயம் படகு இயந்திரம் பழுதடையவே மீனவர் ஒருவர் கடலில் பாய்ந்து கரைக்குச் சென்று சாவி எடுத்துவர முயன்றதாகவும், ஆனால் இம் மீனவர் கடலில் தத்தளித்த வேளையில் மற்றைய மீனவர் இவரைக் காப்பாற்ற கடலில் பாய்ந்த சமயத்தில் இருவரும் கடல் சுழியால் இழுத்து செல்லப்பட்டதைத் தொடர்ந்து இவர்களை கடலில் தேடப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் திங்கட்கிழமை (13.12.2021) வின்சன் நந்தகுமார் அன்ரனி தர்சன் (வயது 19) என்பவர் சடலமாக கரை ஒதுங்கியிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இச் சடலம் மன்னார் தென்கடல் பக்கம் ரயில்வே பாலத்திலிருந்து சற்று தூரத்திலேயே திங்கள்கிழமை (13) காலை 9 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது என பொலிசார் தெரிவித்தனர்.

அதேவேளையில் மற்றையவரான வி.செந்தூரன் (வயது 27) இவரும் சடலமாக கடலில் இதே தினம் நண்பகல் ஒரு மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரின் சடலங்களையும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தேடுதல் பலனளிக்கவில்லை.  கரையொதுங்கின  மீனவர்களின் சடலங்கள்

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House