தம் முடிவில் மாற்றமில்லை -  இ.போ. ச | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு தாம் ஒருபோதும் வர மாட்டோமென இலங்கை போக்குவரத்து சபை விடாப்பிடியாக நின்ற காரணத்தால் இன்றைய கூட்டம் எந்தவித முடிவுமின்றி நிறைவுக்கு வந்ததாக யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் ஒன்று இ. போ. ச மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டது. ஆனாலும் அங்கிருந்து தாம் சேவையில் ஈடுபடமாட்டோம் என இலங்கை போக்குவரத்து சபை மறுத்து வருகிறது.

இந்நிலையில் இ. போ. ச அங்கிருந்து சேவையில் ஈடுபட்டால் மாத்திரமே நாமும் அங்கிருந்து சேவையில் ஈடுபடுவோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதனால் புதிய நெடுந்தூர பேருந்து நிலையம் பயன்பாடு இல்லாமல் காணப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இன்று கூட்டமொன்று இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களை சந்தித்தபோதே முதல்வர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார்.

தம் முடிவில் மாற்றமில்லை -  இ.போ. ச | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House