தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் -  க. வி. விக்னேஸ்வரன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சீனாவுடன் மட்டுமல்லாமல் இந்தியாவுடனும் கவனமாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இல்லையேல், வருங்காலத்தில் இலங்கை பல்வேறு பிரச்னைகளுக்கு முகம் கொடுக்கும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இந்திய - சீனா முரண்பாடு வருங்காலத்தில் இது எம்மை பாதிக்கும்.இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வல்லரசு பிரச்னைகள் - முரண்பாடுகள் - எதிர்பார்ப்புகள் சிறிய நாடான இலங்கைக்கு பெரும் பிரச்னைகளை உருவாக்கவுள்ளது. இந்த அரசாங்கம் ஒருவரை மற்றொருவருக்கு எதிராக தூண்டி விடுகிறது.

ஒரு இலட்சம் கோடி ரூபாய் பெறுமதியான உதவிகள் சீனாவிடம் இருந்து கிடைக்கிறது. இந்தியாவுடன் தமிழ் மக்களுக்கு மொழி, மத, கலாசார ரீதியான தொடர்பு உள்ளது. இந்த தொடர்புகளை பாதிக்கும் வகையில் வடக்குக்கான சீன விஜயம் அமைந்துள்ளது. இந்த வருகையை நல்ல விதத்தில் பார்க்கவில்லை.

சீனா மட்டுமல்ல யாராக இருந்தாலும் அவர்கள் தமது சொந்த நலன்களுக்கே வருவார்கள் - தருவார்கள். இதனால், சீனாவுடன் மட்டுமல்லாமல் இந்தியாவுடனும் கவனமாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இல்லையேல், வருங்காலத்தில் இலங்கை பல்வேறு பிரச்னைகளுக்கு முகம் கொடுக்கும் - என்றார்.

தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் -  க. வி. விக்னேஸ்வரன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் -  க. வி. விக்னேஸ்வரன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் -  க. வி. விக்னேஸ்வரன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் -  க. வி. விக்னேஸ்வரன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் -  க. வி. விக்னேஸ்வரன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More