
posted 27th December 2021
அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் எழுதிய 'மன்னார் மாதோட்டப் புலவர்கள் - கலைஞர்கள்' என்ற நூலின் வெளியீட்டு விழா அன்மையில் நானாட்டான் புனித டிலாசால் கல்லூரியில் இடம்பெற்றது. நாட்டுக்கூத்து நாடகங்கள், பாடல்கள் மற்றும் கவிகள் போன்றவற்றை எழுதிய, மன்னார் மாதோட்டத்தில் வாழ்ந்து மறைந்த மற்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஐம்பது ஆளுமைகளின் வாழ்வு, வரலாறு படைப்புக்கள் ஆகியவற்றை தமிழ் நேசன் அடிகளார் விரிவாக இந்நூலில் பதிவுசெய்துள்ளார். 550 பக்கங்களைக்கொண்ட ஒரு பெருநூலாக இந்நூல் வெளிவந்துள்ளது. தமிழ் நேசன் அடிகளாரின் இரண்டு வருட உழைப்பின் அறுவடையாக இந்த நூல் அமைந்துள்ளது. பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.
வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடாக வந்துள்ள இந்நூலின் வெளியீட்டு விழாவுக்கு வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் தலைமைதாங்கினார். மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். வடக்கு மாகாண முன்னாள் மேலதிக செயலாளர் திரு. அ. பத்திநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஆய்வாளரும் முன்னாள் கல்வி அதிகாரியும்hன திரு, திரு. எஸ். டேவிட் அவர்கள் நூல் ஆய்வுரையை நிகழ்த்தினார். இதன்போது 'சந்தொம்மையார் வாசாப்பு', 'ஞானசவுந்தரி நாடகம்' ஆகிய இரண்டு கூத்து நாடக நூல்களும் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House