ச‌ர்வாதிகார‌மாக‌ த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌  முஸ்லிம்களை அடிமைப்படுத்தும் ஆவ‌ணம் -  முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
ச‌ர்வாதிகார‌மாக‌ த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌  முஸ்லிம்களை அடிமைப்படுத்தும் ஆவ‌ணம் -  முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

"தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்" என்ப‌து வ‌ட‌க்கு கிழ‌க்கை முஸ்லிம்க‌ளை அடிமைப்ப‌டுத்தும் ஆவ‌ணமாக‌வும் கிழ‌க்கு முஸ்லிம்க‌ளின் அபிலாஷைக‌ளுக்கு எதிரான‌துமாகும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

அக்க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து,
த‌மிழ் கூட்ட‌மைப்பு த‌லைமையிலான‌ க‌ட்சிக‌ளும், ர‌வூப் ஹ‌க்கீமும் இணைந்து த‌யாரித்துள்ள‌ இந்த‌ வ‌ரைவு என்ப‌து கிழ‌க்கு மாகாண‌ த‌மிழ் ம‌க்க‌ளிட‌மோ, முஸ்லிம்க‌ளிட‌மோ கேட்காம‌ல் ச‌ர்வாதிகார‌மாக‌ த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ ஒன்றாகும்.

கிழ‌க்கில் அதிக‌ வாக்குக‌ள் கொண்ட‌தாக‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் இருந்தாலும் அக்க‌ட்சியின் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் க‌ட்சித்த‌லைவ‌ருட‌ன் இல்லாம‌ல் உள்ள‌ நிலையில் ர‌வூப் ஹ‌க்கீம் ம‌ட்டுமே அக்க‌ட்சியில் உள்ள‌ நிலையில் மேற்ப‌டி ஆவ‌ண‌த்தில் ஹ‌க்கீம் கையொப்ப‌ம் இடுவ‌து கிழ‌க்கு முஸ்லிம்க‌ளின் ஒப்புத‌லாக‌ அமையாது.

அது ம‌ட்டும‌ல்லாது மேற்ப‌டி ஆவண‌ம் கிழ‌க்கை சேர்ந்த‌ அர‌சிய‌ல் க‌ட்சித்த‌லைமைகளுட‌ன் ஆலோச‌னை செய்யாம‌ல் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ ச‌ர்வாதிகார‌ வ‌ரைவாகும். இந்த‌ வ‌ரைவு கிழ‌க்கு முஸ்லிம்க‌ளுக்கும் நாட்டின் இறைமைக்கும் அச்சுறுத்த‌லாகும் என்ப‌தே எம‌து க‌ட்சியின் நிலைப்பாடாகும்.

ஆக‌வே, இன‌ப்பிர‌ச்சினைக்கான‌ தீர்வில் வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைக்க‌ கோரும் எத்த‌கைய‌ தீர்மான‌த்தையும் எம‌து க‌ட்சி நிராக‌ரிக்கிற‌து.
த‌ற்போது உள்ள‌து போல் வ‌ட‌க்கும் கிழ‌க்கும் பிரிந்துள்ள‌தை ஏற்று முஸ்லிம்க‌ளுக்கான‌ அதிகார‌த்தையும் ஏற்று ஜ‌ன‌நாய‌க‌ ரீதியிலான‌ தீர்வை முன் வைக்க‌ த‌மிழ் கூட்ட‌மைப்பு அனைத்து முஸ்லிம் க‌ட்சிக‌ளுட‌ன் உரையாடிய‌ பின்பே எத்த‌கைய‌ வ‌ரைவையும் முன் வைக்க‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌மிழ் க‌ட்சிக‌ளிட‌மும் இந்திய‌ அர‌சிட‌மும் கோரிக்கை முன் வைக்கிற‌து.

ச‌ர்வாதிகார‌மாக‌ த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌  முஸ்லிம்களை அடிமைப்படுத்தும் ஆவ‌ணம் -  முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House