
posted 22nd December 2021
"செழுமையான நாட்டினைக் கட்டியெழுப்புவோம்" எனும் அரசாங்கத்தின் எண்ணக்கருவிற்கமைவாக யாழ் மாவட்டத்தின் பருத்தித்துறை முனை மற்றும் வல்லை வெளி ஆகியவற்றை நகர அபிவிருத்தி, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் 119 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப விழா 22/12 புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றிருந்தது.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவுக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்டு நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் குறித்த இரண்டு அபிவிருத்தி வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் மகிழ்வூட்டும் செயற்பாட்டிற்காக பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பருத்தித்துறை முனைப் பகுதி 55 மில்லியன் ரூபாய் நிதியிலும், பசுமை உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வல்லை வெளிப் பகுதி 64 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
அபிவிருத்தி வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு வேலைத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்திருந்தார்.மேலும் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நகர அபிவிருத்தி அதிகார சபையினர், பிரதேச செயலர், நகரசபை தவிசாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House