சுகாதார நிமித்தம் பண்டிகையை முன்னிட்டு மன்னாரில் அங்காடி வியாபாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு மன்னார் நகரில் வருடந்தோறும் மன்னார் நகர சபையினால் வழங்கப்படும் அங்காடி வியாபாரத்துக்கான அனுமதி இம்முறை சுகாதார நடைமுறைகளை கவனத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட முறையிலேயே வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் மட்டில் கொவிட் தடுப்பூசி அட்டைகளும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு வழமையாக உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அங்காடி வியாபாரிகள் மன்னாருக்கு படையெடுத்து வருவது வழமையாகும்.

வழமையாக மன்னார் நகர சபையினால் இவ் வியாபாரிகளுக்கு கேள்வி கோரல் மூலம் குறிப்பிடப்பட்ட இடங்களில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரத்துக்கான அனுமதி வழங்கப்படுவதும் வழமையாகும்.

ஆனால் இம்முறை கொவிட் தொற்று காரணமாகவும் சுகாதார நடைமுறைகளை கவனத்தில் கொண்டும், இது தொடர்பாக சுகாதார துறையினர் மற்றும் பொலிசாரின் ஆலோசனைகள் மன்னார் நகர சபை பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இம் முறை மட்டுப்படத்தப்பட்ட முறையிலேயே இவ் அங்காடி வியாபாரிகளுக்கு கடை தொகுதிகள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் மட்டில் சுகாதார துறையினர் மற்றும் பொலிசார் சுகாதார நடைமுறைகளை தீவிரமாக பரிசோதனையில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது வியாபாரிகள் மற்றும் இவ்விடத்துக்கு வருகை தரும் நுகர்வோர் மீது கடுமையான முறையில் கொவிட் தடுப்பூசிகள் போடபட்டுள்ளனரா என்பதும் பரிசோதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் இடத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார நிமித்தம் பண்டிகையை முன்னிட்டு மன்னாரில் அங்காடி வியாபாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House