சகோதரனின் இறப்பில் மர்மம்

தற்கொலை என மூடி மறைக்க முற்பட்ட சகோதரனின் கொலைச் சம்பவத்தை வெளிக் கொண்டுவர முனைவததன் காரணமாக இனந்தெரியாத நபர்களினால் பின்தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொடர்பில் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மூன்றாம் வருட மாணவனாக கல்வி கற்று வந்த மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் என்பவர் கடந்த 17. 11. 2020 அன்று அவர் வாடகைக்கு தங்கியிருந்து கல்வி கற்று வந்த வன்னியசிங்கம் வீதி, கோண்டாவில் கிழக்கில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்டு தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை பொலிசார் தற்கொலை என தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் அவரது சகோதரன் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கடிதம் மூலம் கொண்டு வந்ததனைத் தொடர்ந்து பிரதமரின் பணிப்பிற்கமைய

யாழில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவ் விசாரணைக் குழு 2021 மூன்றாம் மாதம் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் உறவினர்களால் இக்கொலை தொடர்பில் சந்தேகநபர்களும், முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பான தகவல்களும் வழங்கப்பட்டிருந்தன.

அதாவது அன்றைய தினம் பிற்பகல் 1.00 மணிக்கு கதவு திறந்தவர்கள் ஊடாகவே மேற்படி மாணவன் உயிரிழந்த விடயம் தெரியவந்தது.

ஆனால் அதற்கு முன்பாக முற்பகல் 10.30 மணிக்கு சமூக ஊடகத்தில் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்ததுடன் அவர்களின் ஊரிலும் பலருக்கு மாணவன் இறந்தமை தொடர்பான தகவல் தெரிந்திருந்தது. இதுதொடர்பான தகவல்களை விசாரணை குழுவுக்கு வழங்கியும் தற்போது அவர்கள் கொடுத்த தகவல்கள் சில இல்லை எனவும், மீண்டும் தகவல் தருமாறும் விசாரணைக் குழுவின் உப. பொலிஸ் பரிசோதகர் பிரதீப் அறிவித்துள்ளார். இது தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(19) விசாரணை பிரிவுக்கு சென்று தாங்கள் வழங்கிய தகவல்கள் எவ்வாறு தவறவிடப்பட்டது என பொலிஸாருடன் முரண்பட்டதைத் தொடர்ந்து திங்கட்கிழமை(20) இரவு இனந்தெரியாத நபர்கள் சிலர் பின்தொடர்ந்ததன் காரணமாக அவரது சகோதரன் தனது வீட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதுவும் ஏற்படலாம் என்ற அச்சத்தினால் தமக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவரது சகோதரன் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை (21) மாலை முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

சகோதரனின் இறப்பில் மர்மம்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House