
posted 29th December 2021
தெனகம சிறி விஜயாராம தாதுகோபுரத்திற்கு பிரதமரின் தலைமையில் சூடாமாணிக்கத்துடனான கோபுர கலசம் வழங்கி வைப்பு
ஹக்மன தெனகம சிறி விஜயாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் தாதுகோபுரத்திற்கான சூடாமாணிக்கத்துடனான கோபுர கலசம் வழங்கும் உற்சவம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் செவ்வாய்கிழமை (28.12.2021) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
மியன்மாரின் மிண்டொன் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழங்கால கோவிலில் இருந்து தெல்தெனிய ஸ்ரீ ஷாலவன போதி மஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய யடிராவன சீலானந்த தேரருக்கு வழங்கப்பட்ட சூடாமாணிக்கத்துடனான கோபுர கலசம் முதலில் கௌரவ பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பிரதமரினால் இந்த சூடாமாணிக்கத்துடனான கோபுர கலசம் தெனகம சிறி விஜயாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் தாதுகோபுரத்தில் வைப்பதற்காக திஸ்ஸமஹாராம ராஜ மஹா விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய தேவாலேகம தம்மசேன தேரரிடம் வழங்கப்பட்டது.
இச்சூடாமாணிக்கத்துடனான கோபுர கலசம் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி தாதுகோபுரத்தில் வைக்கப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது.
வெஹெரஹேன பூர்வாராம ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய கேகல்லே ரதனசாரே தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இதன்போது பங்கேற்றிருந்தனர்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House