கொள்ளைச் சம்பவத்தில் 16 வருடங்களுக்கு முன் ஈடுபட்டவர்  கைது
கொள்ளைச் சம்பவத்தில் 16 வருடங்களுக்கு முன் ஈடுபட்டவர்  கைது

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சனா விமலவீர

16 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (04) நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளர்.

2005 ஆம் ஆண்டு கரணவாய் மகாவித்தியாலயத்தில் காவல் கடமையில் இருந்த காவலாளியை கட்டி வைத்து விட்டு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் அப்போது முறைப்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் 16 வருடங்கள் கடந்த நிலையில் நேற்று சனிக்கிழமை(04) காலை வடமராட்சி வல்லைப் பகுதியில் வைத்து மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கொள்ளையன் நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சனா விமலவீர மற்றும் ராஜகருணா, பிரேமரத்தின, விஜயபண்டாரா ஆகிய பொலிஸ் குழுவினரே 16 வருடங்கள் கடந்த நிலையில் இக் கொள்ளையனை கைது செய்துள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்தில் 16 வருடங்களுக்கு முன் ஈடுபட்டவர்  கைது

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House