கொரொனா தொற்றும், குணமும், மரணமும் அப்டேட் (08/12/2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கொரோனா தொற்றால் நாட்டில் நேற்று புதன்கிழமை 28 மரணங்கள் நிகழ்ந்தன என்று அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிவித்தது.

60 வயதுக்கு மேற்பட்ட 21 பேரும், 16 - 59 வயது பிரிவை சேர்ந்த 7 பேருமாக 15 ஆண்களும், 13 பெண்களும் தொற்றால் மரணித்தனர்.

இதனால், நாட்டில் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 533ஆக உயர்ந்துள்ளது

யாழ். போதனா வைத்தியசாலையில் 2 வயது பெண் குழந்தை உட்பட வடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று 123 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் - 04 பேர், யாழ். போதனா வைத்தியசாலையில் - இரண்டு வயது பெண்குழந்தை உட்பட 02 பேர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் - 02 பேர் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் - ஒருவர், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர் (உயிரிழிந்த பெண்)

கொரோனா தொற்று உறுதியான மேலும் 185 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 572 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 757 ஆக உயர்வடைந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 569,928 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 11,928 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 365 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 543,467 ஆக அதிகரித்துள்ளது.

கொரொனா தொற்றும், குணமும், மரணமும் அப்டேட் (08/12/2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House