
posted 21st December 2021
மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் குரு முதல்வர் அருட்பணி சேவியர் குரூஸ் அடிகளார் தனது குருத்துவ வாழ்வில் அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவை திங்கள் கிழமை (20.12.2021) மன்னார் ஆயர் இல்லத்தில் எளிமையான முறையில் ஆயர், சக அருட்பணியாளர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடினார்.
இந் நினைவு தினத்தை முன்னிட்டு இன்நாள் முன்னாள் குரு முதல்வர்களான அருட்பணியாளர்கள் பி.கிறிஸ்துநாயகம் மற்றும் ஏ.விக்ரர் சோசை அடியாளர்களுடன் இணைந்து கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுத்தார்
அத்துடன் ஆயர் குருக்கள் புடைசூழ உறவினர்களுடன் இணைந்து கேக் வெட்டி தனது குருத்துவ வாழ்வின் மகிழ்வில் ஈடுபட்டார்.
அருட்தந்தை ஏ.சேவியர் குரூஸ் அடிகளார் 1961 ஆம் ஆண்டு உரோமாபுரியில் 23 ஆம் அருளப்பர் பரிசுத்த பாப்பரசரால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
பின் 1962 ஆம் ஆண்டு யாழ் பேராலயத்தில் உதவி பங்கு தந்தையாக மூன்று வருடங்கள் கடமைபுரிந்தார்.
இதைத் தொடர்ந்து உயிலங்குளம், முருங்கன் பங்கு தந்தையாக கடமையேற்றார்.
பின் யாழ் புனித மாட்டீன் சிறிய குருமட அதிபராகவும், இதைத் தொடர்ந்து அடைக்கலமாதா ஆலய பங்கு தந்தையாகவும் பின் மன்னார் பேராலய பங்கு தந்தையாகவும், இதைத் தொடர்ந்து 1981 ஆம் ஆண்டிலிருந்து மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர்கள் மேதகு தோமாஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை மற்றும் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகைகளின் நிர்வாகத்தில் 27 வருடங்கள் குரு முதல்வராக இருந்துள்ளார்.
இதைத் தொடர்நது மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தில் அதிபராக ஏழு வருடங்கள் கடமைபுரிந்து வந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் தற்பொழுது ஓய்வுநிலையில் இருந்து வரும் இந்நிலையிலேயே அருட்பணி ஏ.சேவியர் குரூஸ் அடிகளார் திங்கள் கிழமை (20.12.2021) தனது குருத்துவ வாழ்வில் வைர விழாவை கொண்டாடுகின்றார்
அத்துடன் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தில் 35 வருடங்கள் இவர் தலைவராக கடமையாற்றி வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House