கிழக்கின் பங்களிப்பு

“ஈழத்து கலை, இலக்கியத்துறை வளர்ச்சியில், கிழக்கிலங்கை தமிழ், முஸ்லிம் படைப்பாளிகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். அத்தகையோரின் சிறந்த படைப்புக்கள் என்றும் நிலைத்து நிற்கின்றன.”
இவ்வாறு, நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் தலைவர் டாக்டர். ஏ.எம்.ஜாபீர் கூறினார்.

நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் 73 ஆவது மாதாந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து வரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பொத்துவில், கொட்டுக்கல் “பீச் லகூன் பரன்” விடுதிமண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.

சங்க உறுப்பினர்களின் புதிய இலக்கியப் படைப்புக்களின் அரங்கேற்றம் உட்பட கௌரவிப்பு நிகழ்வும் இதில் இடம்பெற்றது.
பேரவையின் தலைவர் டாக்டர். ஜாபீர் மேலும் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“இலக்கியமென்பது காலத்தின் கண்ணாடியாக அமையும் போது, அவை உயிரோட்டமுள்ளவையாக சமூகத்தால் அங்கீகாரிக்கப்படுகின்றது.
இந்த வகையில் கிழக்கில் வாழ்ந்த, வாழ்கின்ற இலக்கியப் படைப்பாளரிகளின் படைபுக்கள் சிறந்தவைகளாக மிளிர்கின்றன.

இன்றைய நிலையில் எம்மைப் போன்ற கலை, இலக்கிய அமைப்புக்களின் சேவைகளும், கலை, இலக்கியப் பங்களிப்புகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

குறிப்பாக சமூகத்தில் இலைமறை காய்களாக வளர்ந்துவரும், இளம் கவிஞர்கள், எழுத்தாளர்களை ஆக்கமும், ஊக்கமுமளித்து முன்கொண்டுவருவது நமது பெரும் பணியாகும்.

இப்பணியை நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவை மிக நேர்த்தியுடன் முன்னெடுத்து பல இளம் இலக்கியவாதிகளை இனம் கண்டு ஊக்குவித்து வருகின்றது.

பிரதேச கலை, இலக்கியத்துறை வளர்ச்சிக்கு இத்தகைய பங்களிப்புக்கள் மிக அவசியமாகும்” என்றார்.

செயலாளர் ரி. இஸ்மாயில் (பொறியியலாளர்), ஓய்வு நிலை அதிபர் எஸ்.அகமது, உட்பட மேலும் பலர் உரையாற்றினர்.

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House