
posted 21st December 2021
இந்த நவீன யுகத்தில் எமது கலை கலாச்சாரங்கள் பண்பாடுகள் அழிந்து போகாதிருக்க கலை வளர்க்கப்பட வேண்டும். பதட்டத்திலும் சோகத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் கலைகள் மூலம் இன்புற வேண்டும் என்ற நோக்கில் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் நாம் கலைஞர் ஒன்றுகூடலை நடாத்துகின்றோம் என மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் இவ்வாறு தெரிவித்தார்.
கலாசார அலுவல்கள் திணைக்களமும் மன்னார்பிரதேச கலாச்சார பேரவையும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (19.12.2021) மன்னாரில் கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வை நடாத்தியது.
மன்னார் கலையருவி மண்டபத்தில் நடைபெற்ற இவ் நிகழ்வில் மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில்
இறுக்கமான கட்டுப்பாடான ஒரு சூழலில் இருந்து கொண்டு இந்த கலைஞர் ஒன்றுகூடலில் நாம் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய காலக்கட்டத்தில் கலைஞர்கள் ஒன்றுகூடுவது அவசியமானதொன்றாக காணப்படுகின்றது.
நாம் நித்திரை செய்யும் நேரத்தைவிட ஏனைய நேரங்களில் நாம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த ஓட்டத்திலும் நாம் ஒரு பதட்டத்திலும் சோகத்திலும் நிறைந்தவர்களாகவே இன்றைய காலக்கட்டத்தில் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்.
ஆனால் கலையில் ஈடுபடுவதிலோ அல்லது ரசிப்பதிலோ எம்மை உட்படுத்தும்போது நாம் சகலதையும் மறந்து எமக்குள்ள இருக்கும் துன்பங்கள் பதட்டங்கள் மறைந்து மகிழ்ச்சியில் திலைக்கும்போது எமது உள்ளம் சமநிலை ஆகின்றது.
கலையானது எமது பண்பாடுகளை எடுத்துச் செல்லும் ஒரு ஊடகமாகின்றது. ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு சமூகமும் தங்கள் பண்பாடுகளை வெளிக் கொணர்வது இந்த கலையினாலேயேதான்.
ஆகவே கலையை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எமது பண்பாடுகள் அழிந்து போகாது பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த கலையை நாம் ஒரு ஊடகமாக கொண்டு செயல்பட வேண்டும். இன்றைய தொழில் நுட்ப சூழலிலும் பொருளாதார சூழலிலும் கலையை வளர்த்தெடுப்பதில் தடையாக காணப்படுகின்றது.
இன்று சிறுவர் தொடக்கம் பெரியோர் வரை தொலைக் காட்சியிலும் தொலைபேசியிலும் தங்களை முழமையாக ஈடுபடுத்தி வருவதால் கலைகள் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் எமது பிள்ளைகள் உடல் உள்ள ரீதியாக பாதிப்படைந்து வருகின்றனர்.
சமூகத்தின் இருப்புக்களை எதிர்கால சந்ததினருடைய இருப்பை மேம்படுத்துவதிலும் அவர்களை நல்வழிபடுத்துவதிலும் எமது கலாச்சாரத்தை பிரதிபடுத்துவதாக கலை வளர வேண்டும் அமைய வேண்டும்.
மன்னாரில் பலதரப்பட்ட கலை மன்றங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருவது மகிழச்சிக்குரியது. இன்றை சூழ் நிலையில் இவ் நிகழ்வுக்கு நாம் வெளியில் இருந்து எவரையும் அழைக்காது எமது கலைஞருக்கு எதுவாக இருந்தாலும் ஒரு களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்வை நாம் பல தடைகளை தாண்டி நடாத்துகின்றோம்.
இன்று ஒரு சில கலைஞர் மன்றங்கள் எமது பிரதேசத்தில் செயல்பட்டு வருகின்றபோதும் பல கிராமங்களில் கலைகள் மறைந்து வருகின்றது. ஆகவே நாம் கலையை வளர்ப்பதில் எமது பங்களிப்பை செலுத்த முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House