
posted 1st December 2021
உயர்தர மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் கடந்த ஐந்து வருடங்களாக மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கம் மன்னார் மற்றும் மடு கல்வி திணைக்களங்கள் ஊடாக விஞ்ஞான, கணித பிரிவு உயர்தர கல்வி மாணவர்களுக்கான முன் ஆய்த்த இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்புக்கள் கல்வி திணைக்களத்தின் வளவாளர்கள் மூலம் நடாத்தி வந்தது.
2021 ஆண்டுக்குரிய கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2022 மாசி மாதத்தில் நடைபெற இருப்பதால் இதற்கான பயிற்சி வகுப்புகளாக இது முன்னெடுக்கப்பட்டு வந்தது.
காலை 9 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை நடைபெற்ற இப் பயிற்சி வகுப்பில் 250 மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர்.
இரண்டு தினங்களாக நடைபெற்ற இவ் வகுப்புக்களின் இறுதிநாள் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுகூடங்களில் கல்வி தொடர்பான பரிசோதனைகள் விளக்கங்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தபொழுது எடுக்கப்பட்ட படங்கள்

தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House